ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - தெளிநிலை | பாடல் - 11
பாடல்: 11
திருசியமே ஒன்றுமில்லா திருக்கேயாகி,
இயங்கும் மனோ விகல்பமில்லா நிலை நின்றோர்க்கு,
மருவியிடும் நனவு
கனாச்சுழுத்தி இல்லை. மரணமில்லை, உய்வதில்லை, மற்றொன்றில்லை.
பிரிவறவே மனது
வெறிந்திருக்கும் நிஷ்டையின்
பெருமையினை, யென்
சொல்வோம் என்றிவ்வண்ணம்
பரிவுடனே ரிபு முனிவன் நிநாகனுக்கு
பரமார்த்த உறுதியினைப் பகர்ந்தானன்றே!
கருத்து:-
காணும் பொருளாக இராதே! காண்பவனாக இரு. இதன் பொருள் நாம, ரூப, ஜகத், ஜீவ, சொரூப வீண் கற்பனை பண்ணாதே! எல்லாம் ஒன்றே என்றும்; எல்லாம் நலமே என்றும் ஓர்மை வந்துவிட்டால், வீண் கற்பனை தோன்றாது. இந்த ஓர்மை வந்து விட்டால் நனவு, கனவு, சுழுத்தி இந்த மூன்றும் ஒழிந்து விடும். அதுவே மரணத்தை வென்ற நிலை.
எல்லாம் நீ!
குறிப்பு: ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - தெளிநிலை | பாடல் - 11