ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - தெளிநிலை | பாடல் - 9
weblink
பாடல்: 9
நினைவெதுவோ அதுதானே ஜீவனாகும்!
நினைவெதுவோ அதுதானே
ஈசன் ஆகும்.
நினைவெதுவோ அதுதானே
ஜகமும் ஆகும்!
நினைவெதுவோ அதுதானே
மனதும் ஆகும்!
நினைவெதுவோ அதுதானே
காமம் ஆகும்!
நினைவெதுவோ அதுதானே
கர்மா ஆகும்!
நினைவெதுவோ அதுதானே
துக்கம் ஆகும்!
நினைவெதுவோ அதுதானே அனைத்தும் ஆகும்!
கருத்து:-
நாமரூப ஜகத் பொருள்களாகவும் மற்றும் நாமரூப, ஜீவ ஸ்வரூபங்களாகவும் இருந்தும், அவைகளின் மனோமய விளையாட்டை, விளையாட்டாக கருதாமல், வினையமாக கண்டும், கேட்டும், அதுபற்றி விமர்சித்தும், உனக்கு நான் கதி! எனக்கு நீ கதி! என பின்னிப் பிணைந்து, கொள்வதால் வரும் எண்ணமே ஜீவனாகவும், அதை பராமரிக்கும் ஈசனாகவும், ஜகத்தாகவும் மயங்கும் மனதாகவும், காமமாகவும் அதன் கர்மாவாகவும், அதனால் துக்கமாகவும், ஆக்கி ஜனன மரணத்தை, கொடுக்கிறது. இதை எல்லாம், அந்த காலாதீத ஒன்றாகவும், அதுவே நாம் ஆகவும்: நாமே அதுவாகவும், உணர்ந்தால் ஜீவன் முக்தி அதுவே!
எல்லாம் நீ!
குறிப்பு: ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - தெளிநிலை | பாடல் - 9