ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - தெளிநிலை | பாடல் - 8

                                                                 website


பாடல்: 8

புத்தியினால் உறுதியிடும் பொருளும் இல்லை!
புரைமனதால் மனனமிடும் பொருளும் இல்லை!
சிந்தையினால் சிந்திக்கும் பொருளும் இல்லை!
செறிவாக்கால் வசனிக்கும் பொருளும் இல்லை!
சொந்தமதாய் தோற்றியிடும் பொருளும் இல்லை!
துவைதத்தால் தொடர்கின்ற
பயமும் இல்லை!
சந்தமும் ஸின்மாத்ர
ஸ்வபாவமாகி;
சலியாமல் உளது
பரப்பிரம்மம் ஒன்றே!

கருத்து:-

நாம, ரூப பொருள்களை உண்டு என விமர்சிப்பதும் பொய்! அதிலேயே ஆழ்ந்து, சிந்திப்பதும் பொய்! அதையே திரும்ப, திரும்ப கற்பனை பண்ணுவதும் பொய்! நான், எனது என சொந்தம் கொண்டாடுவதும் பொய்! அப்படி சொந்தம் கொண்டாடி பந்தப்பட்டு, அந்த பந்தத்தால் பயபீதியை உண்டு பண்ணுவதும் சுந்தப் பொய்யே! அய்பயத்தை நீக்க; எல்லாம் ஸித் சொரூபமாகிய, ஆன்மாவே (காலாதீத சொரூபமே) அனைத்து நாம, ரூப, ஜகத்தாக இருந்து விளையாடுகிறது, அந்த ஆன்மாவே நாம்! நாமே ஆன்மா! என்ற மெய் அறிவினால், துவைத பயத்தை நீக்குவாயாக!

                          எல்லாம் நீ!


குறிப்பு: ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - தெளிநிலை | பாடல் - 8

Popular posts from this blog

ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - நிதாகன் அனுபவம் | பாடல் - 129

ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - தெளிநிலை | பாடல் - 87

ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - நிதாகன் அனுபவம் | பாடல் - 113