ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - தெளிநிலை | பாடல் - 7
பாடல்: 7
இத்துவைத ஜகத்தெவையும் விவகாரத்தில்;
யாவர்க்கும் எதிராகத்
தோற்றலாலே!
ஸித்தினது விவர்த்தமதாம்
சித்தம் தானே;
ஜகமெனத் தோற்றுகின்றதென சிலபேர் சொல்வர்!
சித்தமதை நன்றாக
விசாரிக்கும் கால்;
ஸின்மயமாம் பிரம்மமல்லால்
இலவே இல்லை!
புத்திரனே! ஆதலினால்
எக்காலத்தும்;
பூரணமாய் உளது
பரப்பிரம்மம் ஒன்றே!
கருத்து:
நாம,ரூப ஜகமானது துவைதமாக தோற் றும் காரணம்:
விகாரமாக பார்த்து கேட்டு புலம்பி, விவகரித்து, (பிரச்சனை பண்ணி) எதிரும், புதிருமாக விளக்கம் கொடுத்தும், பெற்றும், அது பற்றி, விமர்சிப்பதால் வந்ததே இந்த உலகம் மேலே கண்ட அனைத்திற்கும் காரணம் சித் (ஆத்ம) சொரூபமே. சித்தமாக வடிவெடுத்து, அதுவே தமக்குத்தாமே விளையாடிக் கொண்டிருக்கிறதென உணர்ந்து எல்லாம் ஸித்தாகிய ஆன்மாவே! ஆன்மாவே நாம்! நாமே ஆன்மா! என சும்மா சுகமாக இருப்பாயாக!
எல்லாம் நீ!
.png)
குறிப்பு: ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - தெளிநிலை | பாடல் - 7