ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - தெளிநிலை | பாடல் - 10

weblink


பாடல்: 10

நினைவின்றி நிற்பதுவே அகண்டமாகும்!
நினைவின்றி நிற்பதுவே நிஷ்டையாகும்!
நினைவின்றி நிற்பதுவே
ஞானம் ஆகும்!
நினைவின்றி நிற்பதுவே
மோட்க்ஷமாகும்!
நினைவின்றி நிற்பதுவே
சகஜமாகும்!
நினைவின்றி நிற்பதுவே
பிரம்மமாகும்!
நினைவின்றி நிற்பதுவே
சிவமும் ஆகும்!
நினைவணுவும் இல்லை
எல்லாம் பிரம்மம்தானே!

கருத்து:- 

ஜகத்தை நாமரூபமாக காணாமல்; அதனால் தோன்றும் கற்பனையான எண்ணங்களை எண்ணாமல்; எல்லாம் ஒன்றே! என்றும்; அனைத்தும் பரத்திற்கு (மண்ணிற்கு) அன்னியமில்லை என்றும்; அப்பரத்திற்கு நாம் அன்னியமில்லையென்ற திட உணர்வோடு கூடி, அந்த ஒரு எண்ணத்தை மட்டும் வைத்துத் கொண்டு மற்றும் அனைத்து எண்ணங்களையும் தள்ளுவதற்கு, அந்த எண்ணங்கள் நம்முடையதும் அல்ல! அவை நாமும் அல்ல என சாட்சி சொரூபமாக இருந்து விட்டால்; அதுவே அகண்டானந்தம் ஆகும்! அதுவே அந்த சிவமாகிய பிரம்மமாகும். பின் உன் ஸ்வய அனுபவத்தினால், அந்த நாமே அது! அதுவே நாம்! என்ற ஒரு எண்ணமும் தாமே மஹாமௌனத்தில் ஒடுங்கிவிடும்! அதுவே சும்மா சுகமாக இருக்கும் நிலையாகும்.

                             எல்லாம் நீ!


குறிப்பு: ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - தெளிநிலை | பாடல் - 9

Popular posts from this blog

ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - நிதாகன் அனுபவம் | பாடல் - 129

ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - தெளிநிலை | பாடல் - 87

ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - நிதாகன் அனுபவம் | பாடல் - 113