ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - தெளிநிலை | பாடல் - 6

பாடல் - 6

பயன் எவையும் விரும்பாமல்,
பல ஜன்மத்தில்,
பழுதறவே, அனுஷ்டித்த அறங்களாலே,
அயல் அணுவும் மருவாமல்
மனதின் சுத்தி,
மன்னியதால் சாதனம் ஓர்
நான்கும் பெற்றோர்,
இயல்புடனே இயற்றியிடும் சிரவணாதி,
ஏதுவினால் பரப்பிரம்ம ஞானம் பெற்று,
அயல் அணுவும் அணுகாத அகண்டமான
அத்வைத பரப்பிரம்மம் ஆவாரன்றே!

லௌகீகமோ, தெய்வீகமோ எப்பயனும் கருதாமல் செய்த தர்மத்தினால், நமக்கு அயலாக எதுவும் இல்லையென்ற ஆத்மஞானம் சாத்தியமாகும், இதற்கு நான்கு சாதனம் தேவை. அவையாவன,
சரியை, கிரியை, யோகம், ஞானம் எனச் சொல்வர். இவைகளை அனுபவ நிலையில் சொல்வது என்றால்?

1. கரண ஒழுக்கம்,
2. நிஷ்காம்ய கர்மா & பக்தீ,
3.யோகம்,
4. ஞானம்
என இந்த நான்குமே ஆன்ம சாதனமாகும்!

1. கரண ஒழுக்கம்:
மனம், புத்தி, சித்தம் அஹங்காரம், ஆகிய இந்த நான்குமே அந்தக் கரணங்களாகும் இவைகளினால் வரும் எண்ணம் சொல், செயல்களால் எந்நிலையிலும், எதையும் அடக்காமல் எங்கும், எதிலும், அடங்கி நடப்பதுவே கரண ஒழுக்கமாகும்.

2. நிஷ்காமிய கர்மா & பக்தீ:
லௌகீகமோ, தெய்வீகமோ, எப்பலனும் கருதாமல் வியாபார நோக்கம் இல்லாமல்  இருப்பதிலும், கிடைப்பதிலும் நடப்பதிலும், இவை போதும் என்ற நிறைவோடு இருப்பதாகும்! 

3. யோகம்:
யோகம் என்றால் கட்டுதல்,  தியாகம் என்றால் விடுதல். உன் லட்சியமான நாம் அந்த ஒன்றே! என்ற திட ஞானத்தில், நிலை குலையாமல், மஹாமேருபர்வதம் போல், அசையாமல் இருக்கவும், வாழ்க்கை பாதையில், எதிலும் முட்டாமல், மோதாமல், மேல் எகிறிக்குதிக்காமல், ஓர் ஜீவ நதியைப் போல் நாம் அடங்கி ஒடுங்கி எல்லாம் ஒன்றே என்றும். எல்லாம் நலமே என்றும். நம்முள் நாம் அடங்கி, அளவற்ற பொறுமையை கடைப்பிடிப்பது யோகம் ஆகும். யோகம் என்றால், அதிர்ஷ்டம் எனவும் பொருள்படும். அது இஷ்டப்பட்டால் வரும், உன் இஷ்டத்துகு அது வராது.

4. ஞானம்:
ஞானம் என்றால் அறிவு,  அறிவு என்றால் ஆத்மா, ஆத்மா என்றால்  பரமாத்மா, பரமாத்மாவே பரப்பிரம்மம் ஆகும். அந்த ஆத்மாவாகிய பரப் பிரம்மமே நாம்!  நாமே பிரம்மம் என்ற பேரறிவோடு நாம் கலந்து, கரைந்து, மயமாதலே ஞானம் ஆகும், மற்றும் அனைத்தும் வாய் ஞானமாகும். அவை அஞ்ஞானமாகும்! இப்படி நிலை பெற்றவர் எவர், அவரே நமக்கு அன்னியம் இல்லாத "அது" ஆவர். 

எல்லாம் நீ!


குறிப்பு: ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - தெளிநிலை | பாடல் - 6

Popular posts from this blog

ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - நிதாகன் அனுபவம் | பாடல் - 129

ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - தெளிநிலை | பாடல் - 87

ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - நிதாகன் அனுபவம் | பாடல் - 130