ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - தெளிநிலை | பாடல் - 5




அந்தமிலாத் தன்மையினால்
ஆதி இல்லை.
ஆதியில்லாத் தன்மையினால் அந்தம் இல்லை.
சொந்தம் இல்லாத் தன்மையினால் தோற்றம் இல்லை.
தோற்றம் இல்லாத் தன்மையினால் சொந்தம் இல்லை.
பந்தம் இல்லாத் தன்மையினால் வீடும் இல்லை.
பரவிய வீடு இன்மையினால்
பந்தம் இல்லை.
சந்ததமும் ஸின்மயமாம்
ஆன்மா ஒன்றே,
சலியாத வஸ்துவென நிச்சயிப்பாய்.


நாம ரூப சம்பந்தமான, ஆதியென்பதே இல்லை. அங்கு ஆதியில்லாத தன்மையினால், முடிவு என்ற அந்தம் இல்லை. எனது என சொந்தம் கொண்டாட, எதுவும் இல்லாததனால், நாம ரூப தோற்றம் இல்லை. தோற்றம் இல்லாத தன்மையினால், சொந்தம் கொண்டாடுபவரும், சொந்தம் கொண்டாடுபவையும், இல்லை. சொந்தம் என ஒன்று இல்லாத தன்மையினால் பந்தப்படுத்துவதும் பந்தப்படுபவனும் இல்லை. பந்தம் என ஒன்று இல்லாததனால், ஜீவன் முக்தி எனச் சொல்லும் மோட்ச வீடும் இல்லை. மேலே கூறிய, இவை அனைத்தும் நாம ரூபத்துடனும் வாக்கிய விளக்கத்துடனும் இல்லாமல் காலாதீத "அது" ஆக இருக்கிறது. நாமும் அதுவாக இருக்கிறோம்!

எல்லாம் நீ!


குறிப்பு: ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - தெளிநிலை | பாடல் - 5

Popular posts from this blog

ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - நிதாகன் அனுபவம் | பாடல் - 129

ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - தெளிநிலை | பாடல் - 87

ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - நிதாகன் அனுபவம் | பாடல் - 113