ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - தெளிநிலை | பாடல் - 4
anbin kudil
விரிந்த ஜகத் காரணமாம் விதி இல்லாததால்;
விசித்திரமாய் பகுப்புற்ற ஜகத்தே இல்லை.
தரந்தரமாம் ஜகத்தில்லா தன்மையினால்;
தயங்கும் ஜகத் பாலகனாம் ஹரியும் இல்லை.
பொருந்தும் சராச்சரம் எவையுமிலாமையாலே;
புகலும் ஜகன் நாசகனாம் ஹரனும் இல்லை.
நிரந்தரமாய் நிறைவுற்ற ஆன்மா ஒன்றே;
நிச்சலமாய் நிலைத்ததென நிச்சயிப்பாய்.
கண்ணால் காணக் கூடிய, நாம ரூப சம்பந்தம் கொண்ட அண்ட பிண்ட பிரம்மாண்டங்களும், காலாதீத அந்த ஒன்றுக்கு அன்னியமாய், இல்லாத தன்மையினால், ஜகம் என ஒன்று இல்லை. ஆகவே, ஜகம் இல்லாத தன்மையினால், நாம ரூப சூட்சுமமான "பிரம்மா" இல்லை. அதை காப்பவன் எனச் சொல்லும் நாம ரூப சூட்சும "ஹரியும்" இல்லை. அதை காலத்தை சுட்டிக்காட்டி அழிப்பவன் எனச் சொல்லும் நாம ரூப சூட்சும "ஹரனும்" இல்லை.
ஆனால், மேலே கூறிய இவை அனைத்தும் நாம ரூபமாக இல்லாமல் "அதுவாக" இருக்கிறது. "அதுவே நாமாக இருக்கிறோம்"!
.png)