ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - தெளிநிலை | பாடல் -1
https://www.anbinkudil.online/
ஸ்ரீ சற்குரு திருவடி துணை!
ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம்
முகவுரை
அன்பின் மழலைகளே!
மனநலனும் ஆத்ம
சுகமும் பெறுவீர்களாக!
மனநலன் என்றால் உடல்
உலக சொந்த பந்தம், பாசம், பற்று முதலியவைகளை நாம் ரூபத்துடன் உங்கள் மனம் பற்றியிருப்பதினால் அவைகளை
முடித்து, அனைத்தும் இறைவன் உடைமையே என்று அவன் கொடுத்தால் நிறைவோடு ஏற்றலும், அவன் எடுத்தால் நிறைவோடு ஏற்றலும் “மன நலமாகும்”.
ஆத்ம சுகம் என்றால்
சுத்த ஆத்மாவாக இருக்கப்பட்ட நாம் அறியாமையினால் உடலை நான் என்றும், தோன்றி மறையும் பொருள்களை என்னுடையது என்றும், நாம் ஆத்மா என்று உணராமல் ஒரு ஜீவனாகக் கருதுகிறோம். தெய்வ
அனுக்கிரஹத்தினாலும், குரு கிருபையினாலும் நம் அறியாமை நீங்கி அறிவு சொரூபமாக நாம் ஜீவனல்ல! நாம் ஆத்மாவே! என்றும், அனைத்து ஜீவ சொரூபமும் நாமே என உணர்ந்து நாம ரூப குணங்கள் இறந்து, உலகை ஆக்கி, காத்து, அழிக்கும் ஈசன் அவன் “பரமாத்மா" அவனும் நாமும் ஒன்று என
தெளிந்து, சர்வ வியாபகமாக இருக்கும் ஸ்ரீபரம்பொருளும், நாமும் ஒன்றே! என அனுபவ முதிர்ச்சியால் தெளிவு பெற்று நாம் அதுவாக இருக்கும் நிலை “ஆத்ம சுகமாகும்”.
இந்த இரண்டும் பெற
ஸ்வய ஞானானுபவம் என்ற இந்த நூலின் 108 பாடல்களையும் சிரத்தையுடன் படித்து, வைராக்கியத்துடன் அநுபவ நிலையில் ஏற்று, ஸ்வயமாகவே எந்த பயிற்சியும் முயற்சியும் இல்லாமல் அதுவாகவே இருக்க எம்
ஆசிகள்.
எல்லாம் நீ!
பாடல் -1
சுத்த சிதா காயமதாய் எந்த வஸ்து;
சுதந்திரமாய் தமது பர சக்தியோடு;
பக்த ரெல்லாம் உய்யும் வண்ணம்
கருணையாலே;
பரதத்வ வடிவாக திரண்டெழுந்தே;
அத்வைத ஆனந்தம் உணர அனுபவத்தின்;
அதிசயமிங்கு எல்லோரும் அறியும் வண்ணம்;
நித்தமுமே ஆனந்த நடனம் செய்யும்;
நிதம் அந்த வஸ்துவினை நினைவில்
வைப்போம்.
அந்த காலாதீத பர சொரூபமானது, (நிர்க்குணபிரம்மமானது)
கடைத்தேற வேண்டும் என்ற துடிப்புள்ள,மெய் அன்பர்களுக்காக, சிவசக்தி சொரூபமாக, (சகுணப் பிரம்மமாக)
தோன்றி, அத்வைத ஆனந்தமாகிய, ஜீவன் முக்தியை கொடுக்க வேண்டி, “ஸ்ரீமாதா! ஸ்ரீபிதா! ஸ்ரீகுரு!
ஸ்ரீபகவான்! ஸ்ரீஸத்குரு! காலாதீத பரசொரூபம்!” என ஆறு நிலைகளில் நம்மை ஆட்படுத்தி, ஸத்தாகிய இருப்பும்! ஸித்தாகிய அசைவும்! ஆனந்தமாகிய இன்பத்தையும்! கொடுத்த
வண்ணம், அதுவே “ஸத் ஸித் ஆனந்தமாக”, நர்த்தனம் செய்கிறது! அதை மனம் உருகி துதிப்போமாக!!!
எல்லாம் நீ!
குறிப்பு: ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - தெளிநிலை | பாடல் -1
